பிரிட்டனில் அதிரடி சோதனை நடத்திய அதிகாரிகள் வெளிநாடுகளைச் சேர்ந்த 19 ஆயிரம் பேரை வெளியேற்றியுள்ளனர்.
பிரிட்டனில் சட்டவிரோதமாக தங்கியுள்ள அகதிகளை கண்டறியும் பணியில் அந்நாட்டு அதிகாரிகள் கடந்த வாரம் முதல் ஈடுபட்டுள்ளனர். சட்டவிரோதமான முறையில் தங்கியிருப்பவர்களை கைது செய்து அவர்களது சொந்த நாட்டுக்கு அதிகாரிகள் அனுப்பி வருகின்றனர்.
இதுவரை 19 ஆயிரம் பேர் அவ்வாறு வெளியேற்றப்பட்டுள்ளனர். பிரிட்டனில் பிரதமர் கேர் ஸ்டார்மர் தலைமையில் புதிய அரசு பதவியேற்றதும் இந்தப் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.