இரண்டு அமைச்சுகளுக்கு புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி, வெகுசன ஊடக அமைச்சின் புதிய செயலாளராக அனுஷ பெல்பிட்ட மற்றும் விவசாயத்துறை அமைச்சின் செயலாளராக டி.எம்.எல்.டி பண்டாரநாயக்க ஆகியோர் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
2022ம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையிலேயே இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.