கடந்த அரசாங்க காலத்தில் இடைநடுவே கைவிடப்பட்ட வேலைத்திட்டங்களின் நிர்மாணப்பணிகளை நிறைவுசெய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.
பாலங்கள், வளைவுகள் மற்றும் கிராமப்புற வீதிகள் உள்ளிட்ட பல வேலைத்திட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக துறைசார் பிரதியமைச்சர் ருவன் செனவிரத்ன குறிப்பிட்டார்.
இந்த வேலைத் திட்டங்களுக்கான நிர்மாணப்பணிகள் உரிய திட்டமிட்டமின்றி ஆரம்பிக்கப்பட்டமையினால் அவற்றுக்கான நிதி ஒதுக்கீட்டிலும் சிக்கல் எழுந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுனார்.
இது தொடர்பாக ஆராய்ந்து எதிர்வரும் வரவு – செலவுத்திட்டத்தின் ஊடாக இடைநடுவே கைவிடப்பட்ட அனைத்து வேலைத் திட்டங்களையும் நிறைவு செய்யுமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.