கண்டி ரயில் நிலைய சமிக்ஞை அறையில் கடமையாற்றும் ஊழியர் ஒருவரை இன்று (12) பணி நீக்கம் செய்ய ரயில் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அனுமதியின்றி வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடம் பணம் பெற்று மேற்படி அறையை காண்பித்ததாக குறித்த அதிகாரி மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.வௌிநபர்களுக்கு தடை செய்யப்பட்ட இவ் அறையில் சுற்றுலா பயணிகள் அனுமதியின்றி உள்நுழைந்தமை தொடர்பாகவே குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.