follow the truth

follow the truth

February, 12, 2025
Homeலைஃப்ஸ்டைல்தினமும் எவ்வளவு சூரிய ஒளி நம்மீது படணும் தெரிஞ்சுகோங்க

தினமும் எவ்வளவு சூரிய ஒளி நம்மீது படணும் தெரிஞ்சுகோங்க

Published on

சூரிய வெளிச்சம் இன்றி இவ்வுலகம் இயல்பாக இயங்காது. உலகில் வாழும் அனைத்தும் உயிரினங்களுக்கும் சூரிய வெளிச்சம் தேவைப்படுகிறது. உடல் ஆரோக்கியத்திற்கு சூரிய வெளிச்சம் நம் மீது படுவது அவசியம்.

அரை மணி நேரம் வெயிலில் சுற்றி வந்தவுடனேயே என்னா வெயிலு மண்டைய பொளக்குது என புலம்புகிறோம். வெயில் 100 டிகிரிக்கு மேல் கொழுத்தினால் வீட்டை விட்டு வெளியே வர அஞ்சுகிறோம். வெயிலில் ஓடி ஆடி விளையாடிய காலம் மாறி வீட்டில் ஏசியுடன் முடங்கிவிட்டோம்.

வீட்டிற்குள் ஏசி இன்றி வாழ முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டோம். உடலுக்கு தேவையான விட்டமின் டி சூரிய வெளிச்சத்தின் மூலம் எளிதாக கிடைக்கிறது. உங்களுடைய தோலின் நிறம், வயது, வாழும் பகுதிக்கு ஏற்ப ஒவ்வொரு நபருக்கும் சூரிய வெளிச்சம் பெறுவதன் தேவை மாறுபடுகிறது.

பொதுவாக ஒரு மனிதனுக்கு தினமும் 15 நிமிடங்கள் சூரிய வெளிச்சம் படுவது அவசியம். கருப்பு நிற தோல் உடையவர்களுக்கு 30 நிமிடங்கள் சூரிய வெளிச்சம் தேவை. சூரியனின் புற ஊதா கதிர்கள் எலும்பு, இரத்த அணுக்கள், நோய் எதிர்ப்பு அமைப்புக்கு மிகவும் தேவையான வைட்டமின் டி ஊட்டச்சத்தை வழங்குகிறது. அதே போல் சூரிய ஒளியில் இருந்து கால்சியம், பாஸ்பரஸ் போன்ற கனிமச்சத்தும் கிடைக்கும். விட்டமின் டி தட்டுபாடு ஏற்பட்டால் எலும்புகள் வலு இழக்கும்.

இரவில் நன்றாக தூங்குவதற்கு காலையில் உங்களுடைய உடல் போதுமான சூரிய ஒளி பெற்றிருக்க வேண்டும். வயது அதிகரிக்கும் போது கண்களின் வெளிச்சத்தை எடுத்துக்கொள்ளும் திறன் குறையும். இதன் காரணமாக தூங்குவதற்கு சிரமப்படுவீர்கள்.

காலை நேரத்தில் போதிய சூரிய ஒளி பெற்றால் கொழுப்பை குறைக்கலாம். காலையில் இருந்து மதியத்திற்குள் அரை மணி நேரம் சூரிய ஒளி பெற்றால் அவற்றின் கதிர்கள் தோலுக்கு அடியில் உள்ள கொழுப்பு செல்களை சுருக்கிடும். அதிகளவு சூரிய ஒளி பெறுவது உடற்பயிற்சி செய்வதற்கு சமம்.

சூரிய ஒளி நம்முடைய மூளையில் செரடோனின் சுரப்பை ஊக்குவிக்கும். செரடோனின் சுரப்பு காரணமாக அமைதியாகவும், நேர்மறையாகவும் உணர்வீர்கள். மன அழுத்த பிரச்னைக்கு செரடோனின் சுரப்பு காரணமாக இருக்கலாம். சூரிய ஒளி மன நலனுக்கும் நல்லது.

 

 

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

போத்தல்களிலோ குடத்திலோ தண்ணீரை எத்தனை நாட்கள் சேமித்து வைத்து உபயோகிக்கலாம்?

நீரின்றி அமையாது உலகம் என்ற சொல்லுக்கேற்ப தண்ணீர் இல்லாமல் உலகமும் இயங்காது, உடலும் இயங்காது. நமது உடல் எடையில்...

குழந்தைகளுக்கு டீ, காபி கொடுப்பது ஆபத்தா?

நம் நாட்டில் டீ, காபி மீதான மோகம் அதிகம். நம் நாட்டின் மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் ஒரு கப்...

முட்டை வேக வைத்த தண்ணீரில் இவ்வளவு நன்மைகளா?

பொதுவாக நாம் முட்டைகளை வேக வைத்த தண்ணீரை கீழே ஊற்றி விடுவோம். ஆனால் அந்த தண்ணீரில் உள்ள நன்மை...