சுற்றுலா அவுஸ்திரேலிய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் தற்சமயம் இடம்பெற்று வருகிறது.
போட்டியில் தமது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி சற்றுமுன்னர் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 414 ஓட்டங்களை பெற்றுள்ளது.
அந்த அணி சார்பில் துடுப்பாட்டத்தில் Alex Carey அதிகபட்சமாக 156 ஓட்டங்களை பெற்றதுடன், அணித்தலைவர் Steven Smith 131 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் Prabath Jayasuriya 05 விக்கெட்டுக்களையும், Nishan Peiris 03 விக்கெட்டுக்களையும், Ramesh Mendis 02 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
முன்னதாக இலங்கை அணி தமது முதலாவது இன்னிங்ஸில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 257 ஓட்டங்களை பெற்றது.
இதன்படி அவுஸ்திரேலிய அணி 157 ஓட்டங்களால் முன்னிலையில் உள்ளது.