பாகிஸ்தான் கிரிக்கட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் சைம் ஐயூப், ஐ.சி.சி. சம்பியன் கிண்ண கிரிக்கட் தொடரிலிருந்து விலகியுள்ளார்.
அவரது காலில் ஏற்பட்டுள்ள உபாதையிலிருந்து அவர் மீண்டு வருவதற்கு சுமார் 10 வாரங்கள்வரை செல்லும் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஜனவரி மாதம் தென்னாபிரிக்க அணிக்கு எதிராக இடம்பெற்ற கிரிக்கட் தொடரின் போது சைம் அயூப்பிற்கு உபாதை ஏற்பட்டது.
இந்நிலையில் இது தொடர்பில் தமது சமூக வலைத்தள பக்கங்களில் பதிவொன்றை இட்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கட் சபை இங்கிலாந்து அணிக்கு எதிரான கிரிக்கட் தொடரின் போது சைம் அயூப் அணியுடன் இணைவார் என நம்பிக்கை வெளியிட்டுள்ளது.