இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி காலி சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் இடம்பெற்று வருகிறது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடிப்பெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 257 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
இலங்கை அணி சார்பாக குசல் மெண்டிஸ் 85 ஓட்டங்களையும் தினேஸ் சந்திமால் 74 ஓட்டங்களையும் திமுத் கருணாரத்ன 36 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சில் மிச்சல் ஸ்டார்க், நெதன் லியோன் மற்றும் Matthew Kuhnemann ஆகியோர் தலா 3 விக்கட்டுக்கள் வீதம் கைப்பற்றியுள்ளனர்.