follow the truth

follow the truth

February, 7, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாலசந்த படுகொலை - நீதி பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு

லசந்த படுகொலை – நீதி பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு

Published on

ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை சம்பவத்திற்கு உரிய நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

அத்துடன் படுகொலை செய்யப்பட்ட பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க விவகாரம் குறித்து ஒரு நாள் சபை ஒத்திவைப்பு விவாதத்தை நடத்தத் தயார் என்றும் இன்று (7) பாராளுமன்றத்தில் பிரதமர் தெரிவித்துள்ளார்.

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் மகள், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு அனுப்பியுள்ள கடிதம் தொடர்பில் இன்றைய நாடாளுமன்ற அமர்வில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கருத்துத் தெரிவித்திருந்தார்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எழுப்பிய கேள்விக்கு பிரதமர் இவ்வாறு பதிலளித்திருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் பல சாட்சியங்கள் உள்ளதாகவும் தாமும் அதற்குரிய பல்வேறுபட்ட செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

அரசாங்கம் இந்த விடயத்தில் தெளிவாக உள்ளதாகவும் நீதியைப் பெற்றுக்கொடுக்க தம்மாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதாகவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

நீதியைப் பெற்றுகொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை எனவும் தெரிவித்தார்.

 

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதியம் பெறுவது பற்றிய வெளிப்பாடு

நாடாளுமன்றத்தில் இருந்து ஓய்வு பெற்று தற்போது ஓய்வூதியம் பெற்று வரும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்கள் சார்பாக...

வேலைநிறுத்தங்களும் போராட்டங்களும் இல்லாத ஒரு சகாப்தம்..

நாட்டில் இலவச சுகாதார சேவையில் பணிபுரியும் அனைத்து சுகாதார நிபுணர்களின் மிகுந்த அர்ப்பணிப்பு மற்றும் முயற்சிகள் காரணமாக, நாட்டின்...

தற்போதைய சந்தை விலையை விடக் குறைந்த விலையில் நுகர்வோருக்கு அரிசி

விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யப்படும் நெல்லை அரிசியாக்கி தற்போதைய சந்தை விலையை விடக் குறைந்த விலையில் நுகர்வோருக்கு வழங்க நடவடிக்கை...