புத்தளம் ரயில் பாதையில் 55வது மைலில் உள்ள ரயில் கடவையில் பழுதுபார்க்கும் பணி நடைபெற்று வருவதால், குருநாகல் – புத்தளம் வீதியிலுள்ள பகுதி இன்று (7) முற்றிலுமாக மூடப்படும் என்று இலங்கை ரயில்வே தெரிவித்துள்ளது.
குறித்த வீதி நாளை (8) மற்றும் நாளை மறுதினம் (9) புதுப்பித்தல் பணிகளின் போது அவ்வப்போது மூடப்பட வேண்டியிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக சாரதிகள் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.