பங்களாதேஷில் அவாமி லீக்கை தடை செய்யக் கோரி, டாக்காவில் உள்ள ஷேக் முஜிபுர் ரஹ்மானின் நினைவிடம் மற்றும் இல்லத்தை போராட்டக்காரர்கள் சேதப்படுத்தி, தீ வைத்துள்ளனர்.
முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா ஆன்லைன் வாயிலாக உரையாற்றுவார் என அறிவிக்கப்பட்ட நிலையில், அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்றுள்ளன.
ஹசீனாவின் அனுமதியுடன் நினைவு அருங்காட்சியகமாக உருவாக்கப்பட்ட இந்த வீடு, ஹசீனா குடும்பத்திற்கு எதிராகப் போராடிய ஒரு குழுவினரால் தீக்கிரையாக்கப்பட்டது.
கடந்த ஆகஸ்ட் மாதம் பங்களாதேஷ் மாணவர் போராட்டத்தின் போது தப்பி ஓடிய ஹசீனா இன்னும் இந்தியாவில் இருக்கிறார்.