இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது.
காலியில் இன்று முற்பகல் 10 மணியளவில் இந்த போட்டி ஆரம்பமாகவுள்ளது.
இதேவேளை, இன்றைய தினம் ஆரம்பமாகவுள்ள டெஸ்ட் கிரிக்கெட் போட்டியுடன் தாம் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக திமுத் கருணாரத்ன உத்தியோகப்பூர்வமாக நேற்று அறிவித்துள்ளார்.
இது அவரது 100ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியாகும்.
இதுவரையில் 99 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள திமுத் கருணாரத்ன 7,171 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.