சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட டொயோட்டா லேண்ட் க்ரூய்சர் (Toyata Land Cruiser) ரக ஜீப் வாகனமொன்றை, சட்டவிரோதமான முறையில் பதிவு செய்த குற்றச்சாட்டில் வாகன தொழிலதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் மொரொன்துடுவ பகுதியைச் சேர்ந்தவர் என கையூட்டல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பெப்ரவரி 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் கொழும்பு தலைமை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.