தேயிலையை ஏற்றுமதி செய்வதன் மூலம் ஈரானிடம் பெற்றுக்கொண்ட கடனை இலங்கை அடைக்க உள்ளது. இது தொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
எரிபொருள் இறக்குமதிக்காக ஈரானுக்கு செலுத்த வேண்டிய கடன் தொகையை செலுத்துவதற்காக இலங்கை ஈரானுக்கு தேயிலையை ஏற்றுமதி செய்ய உள்ளது. இலங்கை அரசாங்கம், ஈரானுக்கு 250,925,169 டொலர்கள் கடன் செலுத்த வேண்டியுள்ளது.
இலங்கை பெற்றோலிய வளக் கூட்டுத்தாபனம், ஈரானிய தேசிய எரிபொருள் நிறுவனத்திற்கு இவ்வாறு கடன் செலுத்த வேண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
எரிபொருள் கடனுக்காக தேயிலையை ஏற்றுமதி செய்வது குறித்த புரிந்துணர்வு உடன்படிக்கை வெளிவிவகார அமைச்சில் நேற்றைய தினம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.