இலங்கை அணியின் சகலதுறை வீரரான தசுன் சானக்க ஒரே நாளில் இரண்டு நாடுகளில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இதன்படி நேற்றைய தினம் தசுன் சானக்க, இலங்கையில் நடைபெற்ற மேஜர் லீக் போட்டியில் சிங்கள ஸ்போர்ட்ஸ் கழகத்திற்காக விளையாடினார்.
குறித்த போட்டியில் 87 பந்துகளை எதிர்கொண்ட 10 நான்கு ஓட்டங்கள் 8 ஆறு ஓட்டங்கள் அடங்களாக 123 ஓட்டங்களை விளாசினார்.
இதனையடுத்து டுபாய்க்கு பயணமான தசுன் சானக்க, நேற்று மாலை ILT20 தொடரில் பங்கேற்று டுபாய் கெப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார்.
இந்த போட்டியில் 12 பந்துகளை எதிர்கொண்ட அவர், அதிரடியாக துடுப்பெடுத்தாடி 34 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.