நாடளாவிய ரீதியில் உள்ள 88 தேசிய பாடசாலைகளில் அதிபர் சேவை தரம் ஒன்றுக்கான பற்றாக்குறை நிலவுவதாகக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி, எதிர்வரும் ஆறாம் திகதி தொடக்கம் 11திகதி வரையில் இசுறுபாயவில் குறித்த வெற்றிடங்களுக்குத் தகைமை பெற்ற 79 அதிபர்கள் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படவுள்ளதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.