துறைமுகத்தில் தற்போது நிலவும் கொள்கலன் நெரிசலை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக இலங்கை சுங்கம் 4 நாட்கள் விசேட வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளதாக இலங்கை சுங்க ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கை வணிக சபை மற்றும் இலங்கையில் உள்ள அமெரிக்க வர்த்தக சபை உள்ளிட்ட 29 சங்கங்கள் இணைந்து கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ள கொள்கலன்களை விடுவிப்பது தொடர்பான கூட்டு யோசனைகளை அரசாங்கத்துக்கு முன்மொழிந்துள்ளன.
அடுத்த இரண்டு வாரங்களுக்குள் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்மொழிவுகள் மற்றும் எதிர்வரும் 3 முதல் 6 மாதங்களுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்மொழிவுகள் என்பன இவ்வாறு அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, தேங்கியுள்ள கொள்கலன்களை முறையாக விடுவிப்பதற்காக அடுத்த இரண்டு வாரங்களுக்குள் விசேட சோதனை கருவி கட்டமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.