மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி இன்று(31) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலைகளை திருத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கமைய, 313 ரூபாவாக இருந்த சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 18 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 331 ரூபாவாகும்.
ஏனைய எரிபொருட்களின் விலைகளில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என இலஙகை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.