காலி ஹினிதும மகாபோதிவத்த பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் குறித்து ஏழு பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை நடத்தி வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு சந்தேக நபர்களால் சுடப்பட்டதில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.
துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்கள் அதே பகுதியில் வசிக்கும் தங்குமிடத்தின் உரிமையாளர் என்றும், ஹினிதும மற்றும் அம்பலாங்கொட பகுதிகளைச் சேர்ந்த இருவர் என்றும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.