follow the truth

follow the truth

January, 31, 2025
HomeTOP1ஜனாதிபதியின் செயலாளர் - ஆசிய அபிவிருத்தி வங்கி பிரதிநிதிகளுக்கு இடையில் சந்திப்பு

ஜனாதிபதியின் செயலாளர் – ஆசிய அபிவிருத்தி வங்கி பிரதிநிதிகளுக்கு இடையில் சந்திப்பு

Published on

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பொன்று நேற்று(30) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

இலங்கையின் சுற்றுலாத்துறை வேகமாக வளர்ச்சியடைந்து வருவதாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள் இதன்போது தெரிவித்தனர்.

அதன்படி இந்நாட்டில் சுற்றுலாத்துறை முன்னேற்றத்திற்காக திட்டமிட்டிருக்கும் வேலைத்திட்டங்கள் குறித்து ஜனாதிபதியின் செயலாளர் தெளிவுபடுத்தினார்.

புதிய சுற்றுலா வலயங்களை நிறுவுதல் மற்றும் சுற்றுலாத்துறையின் எதிர்கால திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான அரச நிறுவனங்களின் பங்களிப்பு குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

இலங்கையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த தற்போதைய அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு நன்றி தெரிவித்த ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள், புதிய அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தினால் அடைந்துள்ள முன்னேற்றம் குறித்து திருப்தியடைவதாகவும் தெரிவித்தனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சுப்பர் டீசல் விலை அதிகரிப்பு

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி இன்று(31) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்...

வடக்கில் கடவுச்சீட்டு அலுவலகமொன்றை ஆரம்பிக்க உத்தேசம்

கடவுச் சீட்டு பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் யாழ் மாவட்டத்தில் கடவுச்சீட்டு அலுவலகமொன்றை ஆரம்பிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி...

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத் தலைவர் இராஜினாமா

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் முன்னாள் தலைவர் சிந்தக தர்ஷன ஹேவாபதிரன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். கடந்த வருடம்...