follow the truth

follow the truth

October, 2, 2024
Homeஉள்நாடுபேர வாவி சுத்திகரிப்புக்கு "மிதக்கும் சதுப்பு நிலங்கள்"

பேர வாவி சுத்திகரிப்புக்கு “மிதக்கும் சதுப்பு நிலங்கள்”

Published on

கொழும்பு, பேர வாவி சுத்தப்படுத்தலை ஆரம்பித்து, தாங்கும் தளங்களைக் கொண்ட தாவரங்களுடன் கூடிய ஆயிரம் “மிதக்கும் சதுப்பு நிலத் தாவரங்களை” வாவியின் மத்தியில் வைக்கும் நிகழ்வு இன்று (21) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் மேற்கொள்ளப்பட்டது.

முறையற்ற நகரமயமாக்கல், கொழும்பு நகரில் உள்ள கழிவுநீர் கட்டமைப்புகளை முறையாகச் சீரமைக்காமை காரணமாக, பேர வாவி மாசடைந்துள்ளது. அதன் நீரை சுத்திகரிக்கும் நோக்கத்தில் இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் எம்.ஆர்.டபிள்யூ.டி சொய்சா அவர்களின் வழிகாட்டலில் மிதக்கும் சதுப்பு நிலத் திட்டம் பரீட்சிக்கப்பட்டது.

PVC குழாய்கள், மூங்கில்கள் மற்றும் நுரை மெத்தைகளை மிதக்கும் தளமாகப் பயன்படுத்தி, கெனாஸ், செவந்தரா மற்றும் ஹெலிகோனியா போன்ற நீர்வாழ்த் தாவரங்களின் மூலம் நீரை சுத்திகரிப்பதற்கான பரிசோதனை வெற்றிகரமான முடிவுகளைத் தந்துள்ளதாக சூழலியலாளர் ரனோஷி சிறிபால சுட்டிக்காட்டினார்.

ஈக்கள் மற்றும் நுளம்புகளின் தொல்லையால் ஏற்படும் நோய்களைக் கட்டுப்படுத்துவதில் மறைமுகமான நன்மையை இதன் மூலம் எதிர்பார்ப்பதோடு, குறித்த நீர் நிலைகளில் மீன்களின் அடர்த்தியை அதிகரிப்பது போன்ற பல நன்மைகளை மிகக் குறைந்த செலவில் பெற்றுக்கொள்ள முடியும் என காணி அபிவிருத்திக் கூட்டத்தாபனத்தின் தலைவர் எம்.ஆர்.டபிள்யூ.டி. சொய்சா சுட்டிக்காட்டினார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நாளை அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு

நாளைய தினம் உலக மதுவிலக்கு தினத்தை முன்னிட்டு, நாடளாவிய ரீதியில் மதுபானங்களை விற்பனை செய்வதற்கான அனுமதி பெற்ற அனைத்து...

IMF பிரதிநிதிகளுக்கும் இலங்கை அரசிற்கும் இடையில் கலந்துரையாடல்

சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்துடன் இணைந்ததாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கத்தின் எதிர்கால செயற்திட்டம் குறித்து...

பொதுத் தேர்தல் – இதுவரை கட்டுப்பணம் செலுத்தியோர் விபரம்

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக இதுவரை 37 சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. செப்டெம்பர் மாதம்...