follow the truth

follow the truth

February, 6, 2025
Homeலைஃப்ஸ்டைல்போத்தல்களிலோ குடத்திலோ தண்ணீரை எத்தனை நாட்கள் சேமித்து வைத்து உபயோகிக்கலாம்?

போத்தல்களிலோ குடத்திலோ தண்ணீரை எத்தனை நாட்கள் சேமித்து வைத்து உபயோகிக்கலாம்?

Published on

நீரின்றி அமையாது உலகம் என்ற சொல்லுக்கேற்ப தண்ணீர் இல்லாமல் உலகமும் இயங்காது, உடலும் இயங்காது. நமது உடல் எடையில் சுமார் 60 சதவீதம் தண்ணீரால் நிரப்பப்பட்டிருக்கிறது. எனவே உடல் ஆரோக்கியத்திற்கு நல்ல சுத்தமான கிருமிகள் அற்ற குடிநீர் மிகமிக முக்கியம்.

நல்ல குடிநீருக்கென்று ஒரு சுவை, மணம், தரம் உண்டு. அதிக வெப்பம் உள்ள இடத்தில் இருக்கும் குடிநீரில் பாக்டீரியாக் கிருமிகள் வளரவும், நேரடி சூரிய ஒளி படும் இடத்தில் இருக்கும் குடிநீரில் பாசி படரவும் வாய்ப்பு அதிகம். குளிர்ச்சியான இடத்தில் வைக்கப்படும் குடிநீரில் கிருமிகள், பாசிகள் வளர வாய்ப்பு குறைவு.

வீட்டினுள் சாதாரண இடத்தில் நாம் குடிநீரை பாத்திரத்தில் வைத்திருக்கிறோம் என்றால் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களில் காலி பண்ணிவிடுவது நல்லது. வீட்டிற்குள் பிரிட்ஜில் வைக்கப்படும் வடிகட்டிய குடிநீரை சுமார் நான்கைந்து நாட்களுக்கு மட்டுமே வைத்துக் கொள்ளலாம்.

குடிநீர் வைத்திருக்கும் பாத்திரம் நன்றாக மூடி வைக்கப்பட வேண்டும். இல்லையென்றால் பிரிட்ஜின் உள்ளே இருக்கும் உணவுப் பொருட்கள் மூலம் பூஞ்சைக் காளான் படர வாய்ப்புண்டு.

அதிக நாட்களுக்கு வடிகட்டிய குடிநீரை சேமித்து வைக்க வேண்டும் என்றால் நன்றாக மூடப்பட்ட, சீல் வைக்கப்பட்ட பெரிய பெரிய பாத்திரங்களில் சேமித்து வைக்க வேண்டும். அத்துடன் இந்த பாத்திரங்கள் குளிர்ந்த, இருட்டான பகுதியில் தான் பாதுகாக்கப்பட வேண்டும்.

சூரிய ஒளி நேராக படக்கூடாது. வெப்பமும் அருகில் இருக்கக் கூடாது. அப்பொழுதுதான் நுண்ணுயிர்க் கிருமிகள் வளரும் வாய்ப்பில்லாமல் தடுக்கப்படும்.

பிளாஸ்டிக் போத்தல்களில் கேன்களில், வைக்கப்படும் குடிநீர் வெப்பத்திலும், சூரிய வெளிச்சத்திலும் அதிக நேரம் இருந்தால் பிளாஸ்டிக்கில் உள்ள கண்ணுக்குத் தெரியாத ரசாயனப் பொருட்கள் சிதைந்து குடிநீரில் கலந்துவிட வாய்ப்புண்டு. எனவே உயர்தரமான பிளாஸ்டிக் போத்தல்கள் மற்றும் கேன்களில் தண்ணீரை வைத்து பாதுகாப்பது நல்லது.

நமது வீட்டு வெப்ப சூழ்நிலையில் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் தான் குடிநீரை சேமித்து வைக்க முடியும். மிகப் பழைய குடிநீரை குடிப்பது நல்லதல்ல. போத்தலை திறந்து விட்டால் அந்தத் தண்ணீர், நமது அறையில் இருக்கும் காற்றிலுள்ள கார்பன் டை ஆக்ஸைடை இழுத்துக் கொள்ளும். அதனால் சுவை மாறிவிடும்.

போத்தல்களை திறந்து விட்டால் ஓரிரு நாட்களுக்குள் குடித்து முடித்து விடுவது நல்லது. காரில் வைக்கப்படும் குடிநீர் பாட்டில்களில் வெயில் பட்டு பாக்டீரியா வளர வாய்ப்புண்டு. தினமும் கண்ணாடி டம்ளரை உபயோகித்து தண்ணீர் குடிப்பது, குடித்த பின் அவ்வப்பொழுது கழுவி வைப்பது மிகவும் நல்லது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

குழந்தைகளுக்கு டீ, காபி கொடுப்பது ஆபத்தா?

நம் நாட்டில் டீ, காபி மீதான மோகம் அதிகம். நம் நாட்டின் மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் ஒரு கப்...

முட்டை வேக வைத்த தண்ணீரில் இவ்வளவு நன்மைகளா?

பொதுவாக நாம் முட்டைகளை வேக வைத்த தண்ணீரை கீழே ஊற்றி விடுவோம். ஆனால் அந்த தண்ணீரில் உள்ள நன்மை...

Mrs. World 2025 : போட்டியில் இலங்கைக்கு இரண்டாமிடம் 

அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடைபெற்ற 40வது திருமணமான உலக அழகிப் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த இஷாதி அமந்தா இரண்டாம்...