follow the truth

follow the truth

January, 31, 2025
HomeTOP1தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் இராஜினாமா

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் இராஜினாமா

Published on

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் என்.பி.எம். ரணதுங்க இராஜினாமா செய்துள்ளார்.

இராஜினாமா கடிதம் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக அவரது அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.

கடந்த ஒக்டோபர் 10 ஆம் திகதி குறித்த பதவிக்கு இவர் நியமிக்கப்பட்டிருந்தார்.

அதன்படி, அவர் அந்தப் பதவியில் 3 மாதங்கள் மட்டுமே பணியாற்றி வந்த நிலையில், தனது இராஜினாமாவுக்கான காரணங்களை விளக்கி ஒரு நீண்ட கடிதத்தை எழுதியிருந்தார்.

இதேவேளை, இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ரமால் சிறிவர்தன தனது பதவியை இராஜினாமா செய்ததாக கடந்த 29 ஆம் திகதி தெரிவிக்கப்பட்டது.

மேலும், தேசிய தொலைக்காட்சியின் தலைவராக நியமிக்கப்பட்ட கலாநிதி செனேஷ் திசாநாயக்க பண்டாரவும் சமீபத்தில் பதவி விலகியமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஒக்டோபர் மாதத்தில் அனைத்து மக்களும் கொண்டாடும் விசேட தினமொன்று அறிவிக்கப்படும்

இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் புதிய ஒரு யோசனையை முன்வைக்கவுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில்...

காலி ஹினிதும துப்பாக்கிச்சூடு – 07 பொலிஸ் குழுக்கள் நியமனம்

காலி ஹினிதும மகாபோதிவத்த பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் குறித்து ஏழு பொலிஸ்...

மலையக ரயில் சேவைகள் வழமைக்கு

மலையக மார்க்கத்திலான ரயில் சேவைகள் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளன. மலையக ரயில் மார்க்கத்தில் ஹட்டன் மற்றும் கொட்டகலைக்கு இடையிலான ரயில்...