follow the truth

follow the truth

January, 31, 2025
HomeTOP2ஜப்பானில் பொது இடங்களில் புகைப்பிடிக்க தடை

ஜப்பானில் பொது இடங்களில் புகைப்பிடிக்க தடை

Published on

ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உலக புகழ்பெற்ற கண்காட்சிகளில் ஒன்றாக உலக எக்ஸ்போ கண்காட்சி விளங்குகிறது.

கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா தொற்று பரவலையொட்டி இந்த கண்காட்சி ஒத்தி வைக்கப்பட்டது.

தொடர்ந்து 2022-ம் ஆண்டு துபாயில் கோலாகலமாக நடந்தது. ஜப்பானின் ஒசாகா நகரில் உலக எக்ஸ்போ கண்காட்சி 2025 நடைபெற இருக்கிறது. இதில் உலக நாடுகள் அனைத்தும் கலந்து கொண்டு அரங்குகளை அமைத்து தங்கள் நாட்டின் பராம்பரியம் மற்றும் பண்பாட்டை காட்சிப்படுத்த உள்ளனர்.

ஒசாகாவில் உலக எக்ஸ்போ கண்காட்சி 2025-க்கான திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்தநிலையில் ஒசாகாவில் பொது இடங்களில் சிகரெட், இ-சிகரெட் உள்ளிட்ட போதைப்பொருட்களை பயன்படுத்தி புகைப்பிடிக்க அந்த நகர மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்ததாண்டு முழுவதும் தடை அமுலில் இருக்கும் என்றும் மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மலையக ரயில் சேவைகள் வழமைக்கு

மலையக மார்க்கத்திலான ரயில் சேவைகள் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளன. மலையக ரயில் மார்க்கத்தில் ஹட்டன் மற்றும் கொட்டகலைக்கு இடையிலான ரயில்...

கொழும்பு – காங்கேசன்துறை இரவுநேர ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்

வடக்கு ரயில் மார்க்கத்தின் புனரமைப்பு பணிகள் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த கொழும்பு கோட்டை மற்றும் காங்கேசன்துறைக்கு இடையிலான இரவுநேர ரயில்...

விவசாயிகளின் நலன் கருதி 1.20 லட்சம் உடும்புகளை கொல்ல அரசு திட்டம்

தென்கிழக்கு ஆசியாவில் தீவு நாடாக தாய்வான் உள்ளது. மிக சிறிய தீவு நாடான தாய்வானில் விவசாயம் முக்கிய தொழிலாக...