follow the truth

follow the truth

April, 22, 2025
Homeஉள்நாடுபஸ் , புகையிரதக் கட்டணங்கள் குறித்து வெளியான அறிவிப்பு!

பஸ் , புகையிரதக் கட்டணங்கள் குறித்து வெளியான அறிவிப்பு!

Published on

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும், இலங்கை போக்குவரத்து சபையின் பஸ் அல்லது புகையிரதக் கட்டணங்கள் தற்போதைக்கு அதிகரிக்கப்படாது என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம லங்காதீபவிடம் தெரிவித்தார்.

15 தொடக்கம் 20 வீதம் வரையில் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டுமென தனியார் பஸ் சங்கங்கள் தெரிவித்த போதிலும் ,பொருட்களின் விலைகள் அதிகரித்து மக்கள் பல சிரமங்களை எதிர்நோக்கும் இவ்வேளையில் திடீரென பஸ் கட்டண திருத்தத்தை மேற்கொள்ள முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பேரூந்துகளுக்கு நிவாரணம் வழங்குவதற்கான விசேட வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டு வருவதாகவும் அதற்கமைவாக எதிர்காலத்தில் விசேட நிவாரணப் பொதி அறிமுகப்படுத்தப்படும் எனவும் அமுனுகம தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

”ஸ்ரீ தலதா வழிபாட்டிற்கு” வரும் பக்தர்களிடம் விடுத்துள்ள வேண்டுகோள்

புனித தலதா மாளிகைக்கு வழிபாட்டிற்காக வரும் பக்தர்கள், பொலிதீன் உள்ளிட்ட உக்காத பொருட்களை கொண்டு வருவதைத் தவிர்க்குமாறும், தலதா...

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் புதிய ஆணையாளர் நியமனம்

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் புதிய ஆணையாளர் நாயகமாக கமல் அமரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின்...

பிரதமருக்கும், எதிர்க்கட்சித் தலைவருக்கும் சபாநாயகர் எழுத்து மூலம் விடுத்துள்ள அறிவிப்பு

பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக விசாரணை நடத்துவதற்காக அமைக்கப்படவுள்ள குழுவிற்கு உறுப்பினர்...