follow the truth

follow the truth

February, 23, 2025
HomeTOP2ரணில், நிமல் மற்றும் திலித் ஆகியோர் ஒரே அணியாக...

ரணில், நிமல் மற்றும் திலித் ஆகியோர் ஒரே அணியாக…

Published on

எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, சர்வஜன பலய மற்றும் ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளைச் சேர்ந்த ஒரு குழு எம்.பிக்கள் இணைந்து போட்டியிடத் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த மூன்று கட்சிகளின் பிரதிநிதிகளும் நேற்று முன்தினம் (27) கொழும்பு டார்லி வீதியில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் சந்தித்து இது தொடர்பாக கலந்துரையாடல்களை நடத்தியதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த அமரவீர, அனுர பிரியதர்ஷன யாப்பா, துமிந்த திசாநாயக்க, லசந்த அழகியவண்ண ஆகியோர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தினர், பிரமித பண்டார தென்னகோன் மற்றும் பலர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலிருந்து வெளியேறிய குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்தினர், பேராசிரியர் சன்ன ஜெயசுமன ஆகியோர் சர்வ ஜன பலய கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்தி இந்த விவாதத்தில் பங்கேற்றார்.

உள்ளூராட்சித் தேர்தல்கள் மற்றும் தற்போதைய அரசியல் நிலைமை உள்ளிட்ட பல பிரச்சினைகள் இங்கு விவாதிக்கப்பட்டதாக அறியப்படுகிறது, மேலும் இந்த பிரதிநிதிகள் இதற்கு முன்பு பல சந்தர்ப்பங்களில் இந்த விடயத்தில் விவாதங்களை நடத்தியுள்ளதாகவும் அறியக்கிடைத்தது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ரயில் மோதி விபத்துக்குள்ளான யானைகளில் மேலும் ஒரு யானை குட்டி உயிரிழப்பு

மட்டக்களப்பு - கொழும்பு பிரதான ரயில் பாதையில் மீனகயா கடுகதி ரயிலில் மோதி படுகாயமடைந்த மற்றுமொரு காட்டு யானைக்...

நாடு பூராகவும் தொடரும் கொலைச் சம்பவங்கள் நிறுத்தப்பட வேண்டும்

நாடு முழுவதும் கொலைச் சம்பவங்கள் நடந்து வரும், கொலைக் கலாச்சாரம் இருந்து வரும் நிலையில், நாட்டு மக்களினதும் மக்கள்...

மித்தெனிய முக்கொலை – சந்தேகநபர்களை தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

மித்தெனிய முக்கொலை சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட மூவரையும் 72 மணி நேர தடுப்பு காவலில் வைத்து...