follow the truth

follow the truth

January, 31, 2025
HomeTOP1திருத்தப்பட்ட மின் கட்டணம் குறித்து கலந்துரையாடல்

திருத்தப்பட்ட மின் கட்டணம் குறித்து கலந்துரையாடல்

Published on

திருத்தப்பட்ட மின்சாரக் கட்டணச் சலுகையை பொதுமக்கள் முறையாகப் பெறுகிறார்களா என்பது குறித்து ஆராய்வதற்காக, வரும் 31 ஆம் திகதி கலந்துரையாடல் ஒன்று நடத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இலங்கை வர்த்தக சபை, வர்த்தக மற்றும் தொழில்துறை சபைகளின் கூட்டமைப்பு, இலங்கை ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம், இலங்கை தேசிய தொழில்துறை சபை, கட்டுமான தொழில் சபை மற்றும் கூட்டு ஆடை சங்கங்கள் மன்றம் ஆகியவை கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் நிறுவன தொடர்பாடல் பணிப்பாளர் ஜயநாத் ஹேரத் தெரிவித்தார்.

கடந்த 17 ஆம் திகதி நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் அடுத்த 6 மாதங்களுக்கு மின்சாரக் கட்டணத்தை 20 சதவீதம் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன்படி, 0-30 வரையிலான வீட்டுப் பிரிவிற்கான அலகுக்கான கட்டணத்தை 6 ரூபாவிலிருந்து 4 ரூபாவாகவும், 31-60 வரையிலான பிரிவிற்கான அலகுக் கட்டணத்தை 9 ரூபாவிலிருந்து 6 ரூபாவாகவும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேபோல், வீட்டுப் பிரிவிற்க்கு 20 சதவீதமும், மத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு 21 சதவீதமும், ஹோட்டல்களுக்கு 31 சதவீதமும், தொழில்துறை துறைக்கு 30 சதவீதமும், பொதுத்துறைக்கு 12 சதவீதமும் மின்சாரக் கட்டணங்கள் குறைக்கப்பட்டன.

அரசு நிறுவனங்கள் மற்றும் தெருவிளக்குகளுக்கான கட்டணங்களை 11 சதவீதம் குறைக்க பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு நடவடிக்கை எடுத்திருந்தது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதி நாளை யாழ் விஜயம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாளை(31) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். ஜனாதிபதி தனது விஜயத்தின் போது, ​​வல்வெட்டித்துறை மற்றும் சாவகச்சேரி பகுதிகளில்...

USAID ஊடாக இலங்கைக்கு அமெரிக்கா வழங்கிவரும் உதவிகளுக்கும் சபாநாயகர் நன்றி

பத்தாவது பாராளுமன்றத்தின் இலங்கை – ஐக்கிய அமெரிக்க பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் புதிய தலைவராக தொழில் அமைச்சரும், பொருளாதார...

மறைந்த மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரியை தொடர்பான அறிவிப்பு

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரான மறைந்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் இறுதி கிரியை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(2) மாவிட்டபுரத்தில்...