follow the truth

follow the truth

January, 30, 2025
Homeஉலகம்காஸாவில் 70% வீடுகள் அழிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா மதிப்பிட்டுள்ளது

காஸாவில் 70% வீடுகள் அழிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா மதிப்பிட்டுள்ளது

Published on

நெட்ஸாரிம் பாதை (Netzarim Corridor) என அறியப்படும் சாலையை வழியாக பயணிக்க இஸ்ரேல் அனுமதி வழங்கியதை அடுத்து, பல்லாயிரக்கணக்கான பாலத்தீனியர்கள் வடக்கு காஸாவுக்கு திரும்பி வருகின்றனர்.

காஸா நகரின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில், சில இடங்கள் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் போல காட்சியளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடை பயணமோ அல்லது கார் பயணமோ, தங்கள் வீடுகளை நோக்கிய பயணத்தை பாலத்தீனர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

“இங்கு எந்த வசதிகளும் இல்லை, பொதுச் சேவைகள் இல்லை, மின்சாரம் இல்லை, தண்ணீர் இல்லை, உள்கட்டமைப்புகள் இல்லை” என்று காஸா பத்திரிகையாளர் காடா எல்-குர்த் கூறியுள்ளார். .

ஒக்டோபர் 2023 முதல் காஸாவில் 70% வீடுகள் சேதப்படுத்தப்பட்டோ அல்லது அழிக்கப்பட்டோ இருப்பதாக ஐநா மதிப்பிட்டுள்ளது. வடக்குப் பகுதியில் மிக மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

புதிய இடத்திற்கு மாற்றப்படவுள்ள மோனாலிசா ஓவியம்

பிரான்ஸில் லூவர் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வரும் மோனாலிசா ஓவியம் புதிய இடத்திற்கு மாற்றப்படவுள்ளது. உலகின் அதிக பார்வையாளர்களை கவர்ந்த லூவர்...

தொடர் போராட்டம் – செர்பிய பிரதமர் இராஜினாமா

செர்பியாவில் ஊழல் குற்றச்சாட்டு விவகாரத்தில் போராட்டம் வலுத்து வரும் நிலையில் பிரதமர் மிலாஸ் வுசெவிக் இராஜினாமா செய்துள்ளதாக சர்வதேச...

சிரியா நாட்டின் இடைக்கால ஜனாதிபதியாக அகமது அல் ஷரா நியமனம்

சிரியா நாட்டின் இடைக்கால ஜனாதிபதியாக முன்னாள் கிளிர்ச்சியாளர் குழுவின் தலைவர் அகமது அல் ஷரா நியமிக்கப்பட்டுள்ளார். இதனை இடைக்கால அரசாங்கத்தின்...