follow the truth

follow the truth

January, 29, 2025
HomeTOP1யோஷித நீதிமன்றுக்கு

யோஷித நீதிமன்றுக்கு

Published on

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள யோஷித ராஜபக்ஷ, சற்று முன்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகனான யோஷித ராஜபக்ஷ, நேற்று முன்தினம் (25) காலை தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பெலியத்த நுழைவாயிலுக்கு அருகில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தை சேர்ந்த அதிகாரிகள் குழுவால் கைது செய்யப்பட்டார்.

இரத்மலானை, சிறிமல் பிரதேசத்தில் அமைந்துள்ள 34 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வீடு மற்றும் காணியை வாங்கியது தொடர்பாக யோஷித ராஜபக்ஷவை சந்தேகநபராகப் பெயரிட போதுமான ஆதாரங்கள் இருப்பதாக சட்டமா அதிபரால் கடந்த 23ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அறிவித்ததைத் தொடர்ந்து இந்தக் கைது இடம்பெற்றிருந்தது.

அதற்கமைய, அவரை இன்று (27) வரை விளக்கமறியலில் வைக்குமாறு புதுக்கடை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை நேர அட்டவணை வெளியானது

கல்வியாண்டு 2024 (2025) கல்விப் பொதுத்தராதரப் பத்திர (சாதாரண தர)ப் பரீட்சைக்கான நேர அட்டவணை பரீட்சை திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி,...

கைதான இந்திய மீனவர்கள் விளக்கமறியலில்

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த 13 இந்திய மீனவர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை மல்லாகம் நீதவான் முன்னிலையில்...

TRC ஒப்புதல் இல்லாத மொபைல் போன்களைத் தடுக்க புதிய தானியங்கி அமைப்பு

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (TRC ) ஒப்புதல் இல்லாத மொபைல் போன்களைக் கண்காணித்து பயன்படுத்துவதைத் தடுக்க புதிய மென்பொருள்...