மலேசியாவில் இடம்பெற்று வரும் 19 வயதுக்குட்பட்ட மகளிர் இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரில் சூப்பர் 6 சுற்றில் இலங்கை அணி விளையாடும் போட்டிகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, எதிர்வரும் 26 ஆம் திகதி சூப்பர் 6 சுற்றில் முதல் போட்டியாக இலங்கை அணி ஸ்கொட்லாந்தை எதிர்கொள்ளவுள்ளது.
அதேபோல், இந்த சுற்றில் இலங்கை அணி விளையாடும் இரண்டாவது போட்டி இந்த மாதம் 29 ஆம் திகதி அவுஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற உள்ளது.
16 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டியின் ஆரம்ப சுற்று போட்டிகள் 4 பிரிவுகளின் கீழ் நடைபெற்றன.
‘ஏ’ பிரிவில் விளையாடிய இலங்கை, அதே பிரிவில் போட்டியிட்ட , போட்டியை நடத்தும் மலேசியாவையும், மேற்கிந்திய தீவுகள் அணியையும் எதிர்கொண்டு எளிதில் தோற்கடித்தது.
இருப்பினும், இலங்கை அணி இந்தியாவுக்கு எதிரான போட்டியில் மட்டுமே தோல்வியடைந்து அந்த பிரிவில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது.
சூப்பர் 6 சுற்றில் 12 அணிகள் தலா 6 அணிகள் கொண்ட 2 குழுக்களாக விளையாடவுள்ளன.
ஒவ்வொரு குழுவிலும் முதலிடத்தையும் இரண்டாம் இடத்தையும் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெறும்.
சூப்பர் 6 சுற்றுப் போட்டிகள் நாளை (25) ஆரம்பமாக உள்ளன.