தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மலைப்பகுதிகளின் வீதிகளில் வாகனம் ஓட்டும்போது எச்சரிக்கையாக இருக்குமாறு சாரதிகளுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன் ஊடகப் பேச்சாளரான மூத்த புவியியலாளர் வசந்த சேனாதீர கூறுகையில், சமீபத்திய மழையால், மலைப்பகுதிகளில் உள்ள முக்கிய வீதிகளில் பாறைகள் சரிந்து விழும் அபாயம் நிலவி இருந்ததாகவும் இது குறித்து அவதானத்துடன் செயற்படுமாறும் தெரிவித்திருந்தார்.