follow the truth

follow the truth

January, 24, 2025
HomeTOP1புலமைப்பரிசில் பரீட்சை : நாடளாவியரீதியில் முதலிடம் பெற்ற மதிப்பெண் 188

புலமைப்பரிசில் பரீட்சை : நாடளாவியரீதியில் முதலிடம் பெற்ற மதிப்பெண் 188

Published on

2024 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 18 மாணவர்கள் அதிக மதிப்பெண்களை பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.

இன்று (24) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.

அதன்படி, அதிக மதிப்பெண் பெற்ற மாணவர், 188 மதிப்பெண்களை பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும், 17 மாணவர்கள் 187 மற்றும் 186 என்ற மதிப்பெண்களை பெற்றுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அதிக மதிப்பெண் பெற்ற 18 மாணவர்களில் 11 பேர் ஆண் பிள்ளைகள் என்றும் அவர் தெரிவித்தார்.

2024 ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சையில் 319,284 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்த நிலையில் அதில் 51,244 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.

அதன்படி, பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களின் சதவீதம் 16.05% ஆகும்.

இது கடந்த ஆண்டை விட அதிகமாகும்.

2023 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் 15.12% பேர் சித்தியடைந்திருந்தனர்.

மேலும், இந்த ஆண்டு பெறுபேறுகளின் படி, 77.96% மாணவர்கள் 70 மதிப்பெண்களுக்கும் அதிகமாக பெற்றுள்ளனர்.

இதுவும் கடந்த ஆண்டை விட சற்று அதிகமாகும்.

2023 ஆம் ஆண்டில், 77.75% மாணவர்கள் 70 மதிப்பெண்களுக்கும் அதிகமாக பெற்றிருந்தனர்.

மேலும், பரீட்சையில் தோற்றிய மாணவர்களில் 37.70% பேர் 100 மதிப்பெண்களுக்கும் அதிகமாக பெற்றுள்ளனர்.

இருப்பினும், 2023 உடன் ஒப்பிடும்போது இது குறிப்பிடத்தக்க வீழ்ச்சியாகும்.

கடந்த ஆண்டு, பரீட்சையில் தோற்றிய மாணவர்களில் 45.06% பேர் 100 மதிப்பெண்களுக்கும் அதிகமாக பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கடந்த கால அரசாங்கங்களின் முறையற்ற திட்டமிடலே பொலன்னறுவை வெள்ளப் பெருக்கை சந்திக்க காரணம் – மைத்திரி

பொலன்னறுவை மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக விவசாய நிலங்கள் மற்றும் சொத்துக்கள் சேதமடைந்துள்ளமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி...

மன்னார் காற்றாலை திட்டம் இரத்துச் செய்யப்படவில்லை – அதானி குழுமம் 

மன்னார் மற்றும் பூநகரியில் அமையவுள்ள அதானியின் 484 MW காற்றாலை மின் திட்டங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக வரும் செய்திகள்...

ஏலக்காய் ஏன் மசாலாக்களின் ராணி என்று அழைக்கப்படுகிறது தெரியுமா?

பல மசாலாப்பொருட்களின் தாயகமாக இலங்கை உள்ளது. இலங்கையில் எண்ணற்ற மசாலா பொருட்கள் இருந்தாலும் ஏலக்காய் "மசாலாவின் ராணி" என்று...