அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யும் வர்த்தகர்களைக் கண்டறிய நுகர்வோர் விவகார அதிகாரசபை இன்று (23) கொழும்பு மாவட்டத்தில் சிறப்பு சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
மேலும், பொரளை, நுகேகொடை, வெள்ளவத்தை, தெஹிவளை, ரத்மலானை, மொரட்டுவ, பத்தரமுல்ல, கொஹுவல, பொரலஸ்கமுவ, கொலன்னாவ, வெல்லம்பிட்டிய, கடுவெல, ஹன்வெல்ல, அவிசாவெல்ல, படுக்க மற்றும் கொடகம ஆகிய நகரங்களில் உள்ள மொத்த மற்றும் சில்லறை விற்பனைக் கடைகளிலும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதில் அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த 20 வர்த்தகர்களை கண்டறிந்துள்ளனர்.
அதே நேரத்தில் அரிசியை மறைத்து வைத்திருந்த ஒரு வியாபாரி மற்றும் காலாவதியான அரிசியை சேமித்து வைத்திருந்த ஒரு கடையையும் அதிகாரிகள் சோதனை செய்தனர்.
இந்நிலையில், குறித்த நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று நுகர்வோர் விவகார அதிகாரசபையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், நாடு முழுவதும் இரவு நேர சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் நுகர்வோர் விவகார அதிகார சபை அதிகாரிகள் குறிப்பிட்டனர்.