follow the truth

follow the truth

January, 23, 2025
HomeTOP1முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன மற்றும் மனைவி கைது

முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன மற்றும் மனைவி கைது

Published on

அரச நிதியைத் துஷ்பிரயோகம் செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பாவும் அவரது மனைவியும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

2014 ஆம் ஆண்டில் பிங்கிரிய மற்றும் நாரம்மல ஆகிய பகுதிகளில் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கென, கனியவள கூட்டுத்தாபனத்துக்கு உரித்தான சுமார் 61,46,000 ரூபாய் நிதியை முன்னாள் அமைச்சர் பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அவ்வாறு பெற்றுக்கொண்ட நிதியினை நிவாரணம் வழங்குவதற்குப் பதிலாக 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்துக்காகப் பயன்படுத்தியதாக முன்னாள் அமைச்சர் பிரியதர்ஷன யாப்பா மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, அரச நிதியை முறைக்கேடாகப் பயன்படுத்தியமை மற்றும் பொதுச் சொத்து சட்டத்தின் கீழ் குற்றமொன்றை இழைத்தமை என்பவற்றுக்காக, சட்டமா அதிபரின் ஆலோசனைக்கமைய, முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பாவும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொழும்பு – கண்டி வீதியில் பயணிக்கும் சாரதிகளுக்கான அறிவித்தல்

நிட்டம்புவ ஶ்ரீ விஜேராம விகாரையின் வருடாந்த பெரஹெர ஊர்வலம் நடைபெறவுள்ளதால் கொழும்பு - கண்டி பிரதான வீதியூடான வாகன...

புலமைப்பரிசில் பரீட்சைக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியானது

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று (23) வௌியிடப்பட்டுள்ள நிலையில், தற்போது மாவட்ட ரீதியிலான வெட்டுப்புள்ளிகளை பரீட்சைகள்...

அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த 20 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யும் வர்த்தகர்களைக் கண்டறிய நுகர்வோர் விவகார அதிகாரசபை இன்று (23) கொழும்பு மாவட்டத்தில்...