follow the truth

follow the truth

January, 22, 2025
HomeTOP1சீன அரசாங்கத்திடமிருந்து இலங்கைக்கு பல உதவிகள் கிடைக்கும்

சீன அரசாங்கத்திடமிருந்து இலங்கைக்கு பல உதவிகள் கிடைக்கும்

Published on

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் சீன விஜயத்தின் ஊடாக நாட்டிற்கு பல நிதி உதவிகள் கிடைக்கும் என்றும், 15 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளதாகவும் வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டில் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து ஜனாதிபதிக்கும் சீன ஜனாதிபதிக்கும் இடையில் விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்றதாகவும் சீன ஜனாதிபதி நாட்டிற்கு தொடர்ந்து ஆதரவளிப்பார் என்றும் அமைச்சர் கூறினார்.

இலங்கையில் கொழும்பு துறைமுக நகரம், ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் அதிவேக நெடுஞ்சாலை ஆகியவற்றின் கட்டுமானத்திற்கு ஆதரவளிப்பதாக சீன ஜனாதிபதி கலந்துரையாடலின் போது தெரிவித்ததாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், இலங்கையின் பல்வேறு திட்டங்களுக்கு 500 மில்லியன் யுவான் (20 பில்லியன் ரூபாய்) நிதியுதவி சீன அரசாங்கத்தினால் வழங்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஆறாம் தரத்திற்கு மேற்பட்ட பாடசாலை மாணவிகளின் சுகாதாரப் பிரச்சினை தொடர்பாக கலந்துரையாடல்

நாட்டின் பாடசாலைகளில் 6ஆம் தரத்திற்கு மேற்பட்ட மாணவிகளின் சுகாதார பிரச்சனைக்கு தீர்வு வழங்கும் நோக்கிலான கலந்துரையாடல் இன்று (22)...

  50 மெட்ரிக் தொன் பேரீச்சம்பழங்கள் சவுதி நன்கொடை

எதிர்வரும் ரமழான் நோன்பு காலத்தை முன்னிட்டு  சவுதி அரேபியா 50 மெட்ரிக் தொன் பேரீச்சம்பழங்களை இம்முறை நன்கொடையாக வழங்கியுள்ளது. பேரீச்சம்பழங்கள்...

கண்டி – மஹியங்கனை வீதிக்கு மீண்டும் பூட்டு

நிலவும் மோசமான காலநிலை காரணமாக கண்டி - மஹியங்கனை வீதி தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்று(22) மாலை 06...