மருதானை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பெண் ஒருவர் இன்று (22) அதிகாலை தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
32 வயதான இந்த பெண் மருதானை பொலிஸாரால் நேற்று (21) கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று அதிகாலை 4 மணியளவில் பொலிஸ் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.