துருக்கியின் வடமேற்கில் உள்ள போலு மாகாணம் கிப்ரிசிக் நகரில் கர்தால்கயா ஸ்கை ஹோட்டலில் தீ விபத்து ஏற்பட்டது.
12 தளங்களைக் கொண்ட அந்த ஹோட்டல் முழுவதும் தீ பரவி கொளுந்துவிட்டு எரிந்துள்ளது. தீ விபத்தில் சிக்கி 66 பேர் பலியாகியுள்ளதோடு 50 இற்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். அவர்களை மீட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மேலும் சிலர் உயிரிழந்தனர். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 76-ஆக உயர்ந்துள்ளது.
அவர்களில் 45 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், மற்றவர்களை அடையாளம் காணும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.