follow the truth

follow the truth

January, 22, 2025
HomeTOP1தவுலகல பாடசாலை மாணவியை கடத்திச் சென்ற சம்பவம் - பொலிஸ் அதிகாரி பணி இடைநிறுத்தம்

தவுலகல பாடசாலை மாணவியை கடத்திச் சென்ற சம்பவம் – பொலிஸ் அதிகாரி பணி இடைநிறுத்தம்

Published on

தவுலகல, ஹபுகஹயட பகுதியில் 18 வயது பாடசாலை மாணவி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக பொலிஸார் முறையாகச் செயற்படவில்லை என்ற குற்றச்சாட்டில் பொலிஸ் அதிகாரி ஒருவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் இருவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி, அன்றைய தினம் பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரியாக பணியாற்றிய பொலிஸ் பரிசோதகர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் பிரதான பெண் பொலிஸ் பரிசோதகர் மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரை இடமாற்றம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பிரதான பெண் பொலிஸ் பரிசோதகர், கடுகண்ணாவை பொலிஸ் நிலையத்திற்கும், குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரியாக செயற்பட்ட உப பொலிஸ் பரிசோதகர், வேலம்பொடை பொலிஸ் நிலையத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான உள்ளக பொலிஸ் விசாரணையைத் தொடர்ந்து, மத்திய மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் பத்திநாயக்கவின் உத்தரவின் பேரில் இந்த ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி 19 ஆம் திகதி காலை 7.30 மணியளவில் தவுலகல பொலிஸ் பிரிவின் ஹபுகஹயட பகுதியில் இந்த கடத்தல் நடந்தபோது, ​​அந்த இடத்தில் பயணித்ததாக கூறப்படும் கம்பளை பொலிஸில் கடமையாற்றும் அதிகாரி ஒருவர் அது தொடர்பில் தவுலகல பொலிஸின் செயற்பாட்டு அறைக்கு அறிவித்துள்ளார்.

எனினும் அந்த அறிவிப்பு குறித்து தவுலகல பொலிஸார் உரிய முறையில் செயற்படவில்லை என குற்றச்சாட்டில் இவ்வாறு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எம்.பி அர்ச்சுனாவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தொடர்பான வழக்கை அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் இன்று (22) ஒத்திவைத்து உத்தரவிட்டது. பாராளுமன்ற உறுப்பினர்...

அரசி இறக்குமதியின் போது அறவிடப்பட்ட 65 ரூபா வரியினால் 10.9 பில்லியன் ரூபா வருமானம்

இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் 2413/37 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட ஒழுங்கு விதிக்கும்...

சட்ட திட்டங்களினால் மாத்திரம் நாடொன்று முன்னோக்கிச் செல்ல முடியாது

நடைமுறைச் சட்டங்களினால் மாத்திரம் நாடொன்று முன்னோக்கிச் செல்ல முடியாதெனவும் நாட்டின் பாரம்பரியம் மிக முக்கியமான அம்சமாகும் எனவும் ஜனாதிபதி...