follow the truth

follow the truth

January, 22, 2025
HomeTOP1அரசின் வேலைத்திட்டத்திற்கு இணங்காவிட்டால் அரிசி ஆலைகள் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்படும் - ஜனாதிபதி

அரசின் வேலைத்திட்டத்திற்கு இணங்காவிட்டால் அரிசி ஆலைகள் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்படும் – ஜனாதிபதி

Published on

அரசாங்கத்தின் திட்டத்திற்கு அமைய செயற்படாத அரிசி ஆலைகளுக்கு இராணுவம் அனுப்பப்படும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு (21) சிரச தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சடன’ விசேட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பாரிய நெல் ஆலைகளின் உரிமையாளர்கள் அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைய செயற்படாவிட்டால், நெல் ஆலையில் உள்ள தமது கடைக்கு அரிசி கொண்டு செல்லும் வரை இராணுவ கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி வலியுறுத்தினார்.

அரிசி தேசிய சொத்து என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அரசாங்கம் இதுவரை எந்தவிதமான நியாயமற்ற விதிமுறைகளையும் ஏற்படுத்தவில்லை எனவும் குறிப்பிட்டார்.

மில் உரிமையாளர் எவரேனும் இணங்காவிட்டால், ஆலையை இராணுவத்தினர் கையகப்படுத்தி அரிசி உற்பத்தி செய்து சந்தைக்கு விடப்படும் என்றும் ஜனாதிபதி எச்சரிக்கிறார்.

தற்போதைய கட்டுப்பாட்டு விலையை விட ஒரு சதம் அதிகமாக அரிசி விற்பனை செய்வதற்கு இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அனர்த்த உயிரிழப்புகளுக்கான இழப்பீட்டுத் தொகையை அதிகரிக்க அரசு அனுமதி

அனர்த்தங்களினால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கான இழப்பீட்டுத் தொகையை 250,000 ரூபாவிலிருந்து ஒரு மில்லியன் ரூபாவாக அதிகரிப்பதற்கு அரசாங்கம் அனுமதியளித்துள்ளது. பாதுகாப்பு பிரதி...

பொலிஸ் காவலில் இருந்த பெண் ஒருவர் தற்கொலை

மருதானை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பெண் ஒருவர் இன்று (22) அதிகாலை தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 32...

போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் சாரதிகளை பிடிக்க காவல்துறையிடமிருந்து மென்பொருள்

புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கொழும்பில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் சாரதிகளை அடையாளம் காணும் புதிய மென்பொருள் ஒன்றை இலங்கை...