follow the truth

follow the truth

October, 2, 2024
Homeஉள்நாடுஇலங்கையில் மூடப்படும் பேக்கரிகள் மற்றும் உணவகங்கள்

இலங்கையில் மூடப்படும் பேக்கரிகள் மற்றும் உணவகங்கள்

Published on

நாட்டில் நிலவும் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக பல உணவகங்கள் மற்றும் பேக்கரிகள் மூடப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இப்பிரச்சினை தொடர்பில் எரிவாயு நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்ட போதிலும் இதுவரை தீர்வு காணப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது மொத்த பேக்கரி நிறுவனங்களில் 50 சதவீதம் மூடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். சந்தைக்கு எரிவாயுவை வெளியிடுவதை இடைநிறுத்துமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபை லிட்ரோ நிறுவனத்திற்கு மீண்டும் அறிவித்துள்ளது.

புதிதாக வெளியிடப்பட்ட சிலிண்டர்களில் எரிவாயு கலவை மற்றும் எரிவாயு கசிவு ஏற்பட்டால் நாற்றம் வீசுவதற்கு பயன்படுத்தப்படும் எத்தில் மெக்காப்டானின் அளவு கொண்ட ஸ்டிக்கர் சிலிண்டரில் ஒட்டப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தின் அனுமதி பெற்று அந்த ஸ்டிக்கர்கள் சிலிண்டர்களில் ஒட்டப்பட்டுள்ளதென செய்தி வெளியாகியுள்ளது. எவ்வாறாயினும், எரிவாயு சிலிண்டர்களில் ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு இலங்கை தர நிர்ணய நிறுவனத்திடம் அனுமதி பெறுமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபை லிட்ரோ நிறுவனத்திற்கு நேற்று முன்தினம் இரவு அறிவுறுத்தியுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மதுபான உற்பத்தியாளர்கள் வரி நிலுவைத் தொகையை செலுத்த கால அவகாசம்

மதுபான உற்பத்தியாளர்கள் அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வரி நிலுவைத் தொகையை செலுத்துவதற்கு எதிர்வரும் நவம்பர் மாதம் 30ஆம் திகதி...

ஜனாதிபதியின் ஊழல் எதிர்ப்பு திட்டத்திற்கு பாராட்டு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிற்கும் (Santosh Jha) இடையிலான சந்திப்பு இன்று (02)...

அவுஸ்திரேலியா இலங்கைக்கு தொடர்ச்சியான ஆதரவை வழங்கும்

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கும் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பால் ஸ்டீபன்ஸுக்கும் (Paul Stephens)இடையிலான சந்திப்பொன்று இன்று(02) கொழும்பில்...