follow the truth

follow the truth

January, 22, 2025
HomeTOP2நஷ்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களை மறுசீரமைக்க ஆய்வு..- நிதி பிரதி அமைச்சர்

நஷ்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களை மறுசீரமைக்க ஆய்வு..- நிதி பிரதி அமைச்சர்

Published on

நஷ்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதற்கான சிறந்த வழியை தீர்மானிப்பதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதி நிதி அமைச்சர் ஹர்ஷன சூரியபெரும தெரிவித்துள்ளார்.

நஷ்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதில் அரச தனியார் பங்காளித்துவம் உள்ளிட்ட அனைத்து உத்திகளும் ஆராயப்படும் என்றும் பிரதியமைச்சர் தெரிவித்தார்.

இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மக்களுக்கு மேலும் நிவாரணம் வழங்குவதற்காக சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் மீளாய்வு செய்யப்பட்டு வருவதாகவும் ஏற்கனவே ஓரளவு மீளாய்வு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்த மக்களுக்கு அரசு அதிகபட்ச நிவாரணங்களை வழங்கும்

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்த மக்களுக்கு அரசாங்கம் அதிகபட்ச நிவாரணங்களை வழங்கும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும்...

இந்திய அபிவிருத்தி திட்டங்கள் எமது ஆட்சியிலேயே ஆரம்பித்துவிட்டன

திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் மீட்பு மற்றும் கிழக்கில் இந்திய அபிவிருத்தி திட்டங்கள் என்பன எமது ஆட்சி காலத்திலிலேயே இடம்பெற்றன....

மாணவர்களுக்கு இலவச பாதணிகளுக்கான 3,000 ரூபா வவுச்சர்

தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு, பிரிவெனாக்களிலுள்ள பௌத்த துறவு மாணவர்கள் மற்றும் ஏனைய மாணவர்களுக்கான பாடசாலை பாதணி வழங்கும்...