சீரற்ற வானிலை காரணமாக கண்டி – மஹியங்கனை வீதி இன்று (20) மாலை 6:00 மணி முதல் மூடப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.
அதன்படி, குறித்த வீதியில் கஹடகொல்ல பகுதியில் 44/1 கிலோமீட்டர் தூண் அருகே மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பகுதியில் பாறைகள் இடிந்து விழும் அபாயம் இருப்பதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.