06 கோடியே 63 இலட்சம் ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் இன்று(20) கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் அம்பாந்தோட்டை, கட்டுவன மற்றும் அம்பாறை, மகாஓயா ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் 28 மற்றும் 30 வயதுடையவர்கள் ஆவர்.
சந்தேக நபர்கள் இருவரும் தாய்லாந்தின் பாங்கொக் நகரத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்றைய தினம் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.