போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று காலை மொரட்டுவையிலிருந்து கொழும்பு கோட்டைக்கு அலுவலக ரயிலில் சாதாரண பயணியாகப் பயணம் செய்துள்ளார்.
பயணத்தின் போது ரயில் பயணிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து பயணிகளுடன் அமைச்சர் கலந்துரையாடினார்.
இந்த முன்னறிவிப்பு இல்லாத ஆய்வுச் சுற்றுப்பயணத்தின் போது, அடிக்கடி ரயில் தாமதங்கள், மின் விசிறிகள் பழுதடைதல், ரயில்களில் ஏறுவதில் மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் சவால்கள், தண்டவாளங்கள் மற்றும் நிலையங்களில் சுகாதாரமற்ற நிலைமைகள் மற்றும்பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவிக்கும் காலாவதியான தொடருந்துகளைத் தொடர்ந்து பயன்படுத்துவது குறித்து பயணிகள் கவலை தெரிவித்ததாக கூறப்படுகிறது.