follow the truth

follow the truth

April, 25, 2025
HomeTOP2ஜனாதிபதியாக டிரம்ப் நாளை பதவியேற்கிறார்

ஜனாதிபதியாக டிரம்ப் நாளை பதவியேற்கிறார்

Published on

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டிரம்ப் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் தோல்வி அடைந்தார்.

அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக டிரம்ப் நாளை பதவியேற்கிறார். தலைநகர் வாஷிங்டனில் உள்ள பாராளுமன்ற கட்டிடத்தில் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. வழக்கமாக ஜனாதிபதி பதவியேற்பு விழா பாராளுமன்றம் முன்பு நடைபெறும்.

ஆனால் கடுமையான குளிர் நிலவுவதால் பாராளுமன்ற கட்டிடத்திற்கு உள்ளே ரோடுண்டா என்ற பகுதியில் விழா நடைபெறுகிறது. இதற்கிடையே டிரம்ப், புளோரிடாவின் பாம் பீச்சிலிருந்து வாஷிங்டனுக்கு தனி விமானத்தில் தனது மனைவி, மகனுடன் புறப்பட்டு நேற்று நள்ளிரவு சென்றடைந்தார்.

அவர் அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக பதவியேற்க உள்ளதை குறிக்கும் வகையில், விமானத்தில் ஸ்பெஷல் மிஷன் 47 என்று குறிப்பிடப்பட்டிருந்தது. பதவியேற்பு விழாவின் கருப்பொருள் “நமது நீடித்த ஜனநாயகம்: ஒரு அரசியலமைப்பு வாக்குறுதி” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதவியேற்பு விழாவிற்கு முன்னதாக பதவியில் இருந்து வெளியேறும் ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் ஆகியோர் வெள்ளை மாளிகையில் டிரம்ப் மற்றும் மெலனியா டிரம்ப் ஆகியோருடன் தேநீர் அருந்துவார்கள்.

அதைத் தொடர்ந்து, பதவியேற்பு விழாவிற்காக டிரம்ப் பாராளுமன்ற கட்டிடத்திற்குச் செல்வார்.

டிரம்ப் பதவியேற்பு விழாவையொட்டி அமெரிக்கா முழுவதும் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. குறிப்பாக வாஷிங்டனில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பொலிசார் மற்றும் சிறப்பு பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். வாஷிங்டனில் டிரம்பின் ஆதரவாளர்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் குவிந்து வருகிறார்கள்.

டிரம்ப் பதவியேற்றதும் தனது முதல் நாளில் எந்த உத்தரவுகளில் கையெழுத்திடுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. குறிப்பாக குடியேற்றம் தொடர்பாக புதிய உத்தரவு வெளியாகலாம்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அமெரிக்காவில் மீண்டும் காட்டுத் தீ – ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்

அமெரிக்காவின் நியூஜெர்சியின் கொளுத்தும் வெயில் காரணமாக வனப்பகுதியில் காட்டுத்தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. காற்றின் வேகம் காரணமாக...

பாகிஸ்தான் வான் பரப்பில் இந்திய விமானங்கள் பறக்க தடை

காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்ந்து தக்க பதிலடி கொடுப்பதற்கான...

ரூ.98 மில்லியன் மிச்சப்படுத்திய NPP அரசின் SMS செய்தி – அப்பட்டமான பொய் அது இலவச சேவை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் மக்களுக்கு அனுப்பப்பட்ட புத்தாண்டு குறுஞ்செய்திகளுக்காக 98 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளை...