follow the truth

follow the truth

April, 23, 2025
HomeTOP2மருந்துகளைத் தட்டுப்பாடின்றி வழங்க உற்பத்தித் திறனைத் துரிதமாக அதிகரிக்க நடவடிக்கை - நளிந்த ஜயதிஸ்ஸ

மருந்துகளைத் தட்டுப்பாடின்றி வழங்க உற்பத்தித் திறனைத் துரிதமாக அதிகரிக்க நடவடிக்கை – நளிந்த ஜயதிஸ்ஸ

Published on

எதிர்வரும் இரண்டு வாரங்களில் தட்டுப்பாடின்றி மருந்துகளை வழங்குவதற்கு, உற்பத்தித் திறனைத் துரிதமாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ பணிப்புரை விடுத்துள்ளார்.
இலங்கை அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அமைச்சர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.

பல்வேறு காரணிகளால் சிகிச்சைக்குத் தேவையான மருந்துகளைத் தொடர்ச்சியாக வழங்குவது சவாலாக மாறியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மருந்து வழங்குநர் பற்றாக்குறை மற்றும் உலகளாவிய பிரச்சினை, விநியோக வலையமைப்பின் சீர்குலைவு போன்ற காரணங்களால் அரசாங்க வைத்தியசாலை அமைப்புகளில் தொடர்ந்தும் மருந்து விநியோகம் செய்ய முடியாமல் உள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக் காட்டியுள்ளார்.

அத்துடன், மருந்து உற்பத்தித் திறனை அதிகரிக்கத் தேவையான மூலப்பொருட்களை உடனடியாக இறக்குமதி செய்வதில் உள்ள சிக்கல் குறித்து ஆராய்ந்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, மருந்து விநியோகத்தைச் சீர்செய்து, மருந்து உற்பத்தித் திறனை அதிகரிக்கத் தேவையான திட்டங்களைத் தயாரிப்பது தொடர்பில் அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளார்.

ஒவ்வொரு நகரத்தையும் உள்ளடக்கும் வகையில் அரச மருந்தக சங்கிலியின் கிளைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், மருந்து ஆராய்ச்சி நடவடிக்கைகள், மருந்து விநியோக திட்டம், ஆய்வக வசதிகள், சந்தைப்படுத்தல் மற்றும் அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் மனித வள மேம்பாடு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் இதன்போது அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஆஸ்திரேலியாவில் நில நடுக்கம்

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் 4.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் கடற்கரையோரப் பகுதிகளான தாரி முதல்...

ஜனாதிபதியின் புத்தாண்டு வாழ்த்து SMS அனுப்பாததால் நாட்டுக்கு 9.8 மில்லியன் ரூபாய் மிச்சமானது..- நிலந்தி

இந்தப் புத்தாண்டில் புத்தாண்டு வாழ்த்துக்களை அனுப்பாததன் மூலம் ஜனாதிபதி அனுர திசாநாயக்க நாட்டிற்கு 9.8 மில்லியன் ரூபாவை சேமித்துள்ளதாக...

கட்டான பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு

கட்டான கட்டியல பகுதியில் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்க முற்பட்ட வேளை...