ஒப்பந்தத்தை மீறினால் மீண்டும் தாக்குதல் நடத்துவோம் என ஹமாஸ் இயக்கத்திற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தத்தின் ஆரம்ப கட்டம் இன்று (19) முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தற்போதுள்ள சர்ச்சைக்குரிய சூழ்நிலைகளுக்கு தீர்வு காண முடிந்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.