உலகப் புகழ்பெற்ற பிபிசி செய்தி சேவையால் இந்த ஆண்டு உலகின் சிறந்த சுற்றுலாத் தலங்களை வரிசைப்படுத்தி வெளியிடப்பட்ட தரவரிசையில் இலங்கை முதல் 10 இடங்களுக்குள் உள்வாங்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் உலக சுற்றுலா அமைப்பு மற்றும் உலக சுற்றுலா பேரவை உள்ளிட்ட உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட சுற்றுலா அதிகாரிகளின் தகவல்கள் மற்றும் ஆய்வுகள் ஆகியவற்றின் அடிப்படையில் பி.பி.சி நிறுவனம் இந்த புதிய அறிக்கையை வௌியிட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் இலங்கை 9ஆவது இடத்தில் உள்ளதுடன், முதல் 10 இடங்களில் உள்ள ஒரே தெற்காசிய நாடாக இலங்கை காணப்படுகிறது.
தரவரிசையில் டொமினிகன் குடியரசு முதலிடத்திலும், ஜப்பானிய தீவான நவோஷிமா இரண்டாவது இடத்திலும் உள்ளன.
இத்தாலியில் உள்ள டோலமைட் மலைகள் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளன.
பிபிசி செய்தி சேவை இவ்வாறு சுற்றுலா செல்ல சிறந்த 25 இடங்களை வெளியிட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.