follow the truth

follow the truth

January, 19, 2025
HomeTOP1கனமழை காரணமாக சேனாநாயக்க சமுத்திரத்தின் வான் கதவுகள் திறப்பு

கனமழை காரணமாக சேனாநாயக்க சமுத்திரத்தின் வான் கதவுகள் திறப்பு

Published on

கனமழை காரணமாக சேனாநாயக்க சமுத்திரத்தின் வான் கதவுகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தலா 6 அங்குலமாக 5 வான்கதவுகளை திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, அந்த வான்கதவுகளை 12 அங்குலமாகத் திறக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

இதன் காரணமாக, நீர்த்தேக்கத்தைச் சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையில், நேற்று (18) இரவு முதல் மகாவலி ஆற்றின் சில பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக, அடுத்த 48 மணி நேரத்திற்குள் மகாவலி ஆற்றுப் படுகையின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரித்துள்ளது.

அதன்படி, திம்புலாகல, ஈச்சிலம்பற்று, ஹிங்குராக்கொட, கந்தளாய், கிண்ணியா, கோறளைப்பற்று வடக்கு, லங்காபுர, மெதிரிகிரிய, மூதூர், சேருவில, தமன்கடுவ, தம்பலகாமம் மற்றும் வெலிகந்த ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளின் மகாவலி ஆற்றின் கரையோர தாழ்நிலப் பகுதிகளுக்கு இந்த எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

எனவே, அந்தப் பகுதிகளில் மகாவலி ஆற்றின் அருகே வசிக்கும் பொதுமக்கள் இது தொடர்பாக மிகவும் விழிப்புடன் இருக்குமாறும், வெள்ளப்பெருக்கில் இருந்து பாதுகாத்து கொள்ள தேவையான நடவடிக்கை எடுக்குமாறும் அந்த திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

விஜித் விஜயமுனி சொய்சா கைது

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விஜித் விஜயமுனி சொய்சா இன்று (19) வலான மத்திய ஊழல் தடுப்பு பிரிவினரால் கைது...

கல்கிஸை துப்பாக்கிச் சூடு – காயமடைந்த நபர் உயிரிழப்பு

கல்கிஸை, சிறிபால மாவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபர் கல்கிஸை - படோவிட...

அறுகம்பே தாக்குதலுக்கு முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களும் கூட்டு

இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள் அதிகம் தங்கியுள்ள அருகம்பேயின் சுற்றுலாப் பகுதியை இலக்கு வைத்து பாரிய பயங்கரவாதத் தாக்குதலை நடத்துவதற்கு...