வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இடம்பெற்ற சமையல் எரிவாயு வெடிப்புச் சம்பவங்களினால் 07 பேர் உயிரிழந்துள்ளனர்.
எரிவாயு வெடிப்பு தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி செயலணியின் உறுப்பினரும், மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான தேசபந்து தென்னக்கோன் இதனை தெரிவித்துள்ளார்.
குறித்த காலப்பகுதியில் எரிவாயு வெடிப்புடன் தொடர்புடைய 847 சமையல் எரிவாயு வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இதுவரையில் எரிவாயு விபத்துக்களினால் 16 பேர் காயமடைந்துள்ளதுடன் சொத்துக்களுக்கு சேதமேற்பட்ட 18 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இந்த ஆண்டில் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களில் 797 வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், லாஃப் சிலிண்டர்களில் 50 வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.